This is a free resource tailored for all medical practitioners in Singapore in light of the recent COVID-19 outbreak in migrant worker dormitories.
It is appropriate for most settings - ED, GP, dormitory. Both text and audio are available.
Best viewed on mobile.
BOTH URGENT AND NON-URGENT PHONE TRANSLATIONS, DO NOT HESITATE TO CONTACT US FOR IMMEDIATE ASSISTANCE TO AVOID COMPROMISES IN PATIENT CARE.
Good morning
காலை வணக்கம்
Good afternoon
மதிய வணக்கம்
Good evening
மாலை வணக்கம்
I am the nurse
நான் ஒரு தாதி.
I am the doctor
நான் ஒரு மருத்துவர்.
You are in the intensive care unit.
நீங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ. சீ. யூ -வில்) இருக்கிறீர்கள்.
Today is Monday
இன்றைக்கு திங்கள்
Today is Tuesday
இன்றைக்கு செவ்வாய்
Today is Wednesday
இன்றைக்கு புதன்
Today is Thursday
இன்றைக்கு வியாழன்
Today is Friday
இன்றைக்கு வெள்ளி
Today is Saturday
இன்றைக்கு சனி
Today is Sunday
இன்றைக்கு ஞாயிறு
You are getting better
நீங்கள் குணம் அடைந்து வருகிறீர்கள்.
We will remove the breathing tube when you are better
நீங்கள் குணமடைந்த பின் இந்த செயற்கை சுவாசக் குழாயை அகற்றுவோம்.
You can talk after we remove the breathing tube
இந்த செயற்கை சுவாசக் குழாயை அகற்றிய பின் நீங்கள் பேசலாம்.
Take a deep breath
ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள்.
Give me a big cough
ஆழமாக இருமுங்கள்.
Don’t struggle
கடுமுயற்சி எடுக்க வேண்டாம்.
Don’t move
அசையாமல் இருங்கள்.
Lift up your arm
உங்கள் கையை உயர்த்துங்கள்.
Lift up your leg
உங்கள் காலை உயர்த்துங்கள்.
Squeeze my hand
என் கையை அழுத்தமாக பிடியுங்கள்.
Show me two fingers
இரண்டு விரல்களைக் காட்டவும்.
Open your mouth
உங்களின் வாயைத் திறக்கவும்.
Stick out your tongue
உங்களுடைய நாக்கை வெளியே நீட்டுங்கள்.
Open your eyes
உங்களின் கண்களைத் திறக்கவும்.
I’m going to shine a light into your eyes. It will be bright.
நான் இப்போது உங்கள் கண்களில் ஒளியைப் பாய்ச்சப் போகிறேன். அது பிரகாசமாக இருக்கும். அது உங்கள் கண்களைக் கூச செய்யலாம்.
Your lungs are weak. We are going to insert a breathing tube to help you breathe.
உங்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் சுலபமாக மூச்சு விடுவதற்கு நாங்கள் ஒரு சுவாசக் குழாயை உங்களுடைய மூக்கில் இட போகிறோம்.
You are going to sleep now
நீங்கள் இப்போது தூங்கப் போகிறீர்கள்.
We are turning you onto your belly to help your lungs expand
உங்கள் நுரையீரலை விரிவாக்குவதற்கு நாங்கள் உங்களை குப்புற படுக்க வைக்க போகிறோம்.
We are inserting a tube to help you pass urine
நீங்கள் சிறுநீர் கழிப்பதற்கு நாங்கள் இப்போது ஒரு குழாயை நுழைக்க போகிறோம்.
We are inserting a tube through your nose
நாங்கள் உங்கள் மூக்கின் வாயிலாக ஒரு குழாயை நுழைக்கப் போகிறோம்.
We are going to give you an injection in your neck to give you medications
உங்களுக்கு மருந்து கொடுப்பதற்காக நாங்கள் உங்கள் கழுத்தில் ஒரு ஊசி போட போகிறோம்.
We are going to give you an injection in your arm to measure your blood pressure
உங்களின் இரத்த அழுத்தத்தை சோதிப்பதற்காக நாங்கள் உங்கள் கையில் ஒரு ஊசி போட போகிறோம்.
We will give you sleeping medications.
நீங்கள் தூங்குவதற்கு நாங்கள் உங்களுக்கு தூக்க மருந்து கொடுக்கப் போகிறோம்.
We will give you painkillers.
உங்கள் வலியை போக்க, நாங்கள் உங்களுக்கு வலி நிவாரண மருந்து கொடுக்கப் போகிறோம்.
We are giving you medication to keep your blood pressure up.
உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க, நாங்கள் உங்களுக்கு மருந்து கொடுக்கிறோம்.
We are going to remove the breathing tube.
நாங்கள் உங்கள் செயற்கை மூச்சுக்குழாயை அகற்றப் போகிறோம்.
We are going to suck out your phlegm
உங்கள் சலியை உறிஞ்சு வெளியே எடுக்க போகிறோம்.
We are going to clean you with a sponge
நாங்கள் உங்களை பஞ்சை வைத்து சுத்தம் செய்யப் போகிறோம்.
Turn left
இடது பக்கம் திரும்பவும்.
Turn right
வலது பக்கம் திரும்பவும்.
We will change your diapers
உங்கள் டயப்பரை நாங்கள் இப்போது மாற்றுவோம்.
Lift up your leg
உங்கள் காலை உயர்த்துங்கள்.
We are going to sit you up
நாங்கள் உங்களை உட்கார வைக்கப் போகிறோம்.
We are going to shift you up the bed
நாங்கள் உங்களை படுக்கையின் மேல் பகுதிக்கு நகர்த்தப் போகிறோம்.
We are going to clean your mouth
நாங்கள் உங்கள் வாயை சுத்தம் செய்யப் போகிறோம்.
Do not swallow the gargle
நீங்கள் கொப்பளித்த பிறகு நீரை முழுங்கக் கூடாது.
Are you in pain?
நீங்கள் வலியில் இருக்கிறீர்களா ?
Where is the pain?
எங்கே வலிக்கிறது?
Is it mild, moderate or severe?
வலி லேசானதா, மிதமானதா அல்லது மிகவும் அதிகமாக உள்ளதா?
Can you point to the pain?
வலி எங்கே இருக்கிறதென்று எனக்கு சுட்டிக்காட்ட முடியுமா?
BODY PARTS
Head
தலை
Eyes
கண்கள்
Ears
காதுகள்
Nose
மூக்கு
Mouth
வாய்
Throat
தொண்டை
Chest
மார்பு
Abdomen
அடிவயிறு
Back
முதுகு
Arms
கைகள்
Legs
கால்கள்
Feet
பாதம்