top of page
This page is meant for Tamil-speaking patients.
You may download this FAQ to print for distribution: 

1. What is COVID-19? 

1. COVID-19 என்றால் என்ன?

COVID-19 (more specifically, a coronavirus) is the disease identified as the cause of an outbreak of respiratory illness first detected in Wuhan, China​

 

COVID-19 (இன்னும் குறிப்பாக, கொரோனா வைரஸ்) சுவாசத்திற்குரிய ஒரு வகை நோய்.

சீனாவின் வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

 

2. What are the symptoms of COVID-19?

2. COVID-19 இன் அறிகுறிகள் யாவை?
 

The most common symptoms are fever, tiredness and dry cough. Some patients also have runny nose, sore throat or diarrhoea. These symptoms are usually mild and begin gradually.

Some people become infected but remain asymptomatic.

It can however, also cause lung infection, or pneumonia.

காய்ச்சல், சோர்வு மற்றும் வறட்டு இருமல் ஆகியவை மிகவும் பொதுவான அறிகுறிகளாகும். சில நோயாளிகள் ,  சளி தொண்டை வலி அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவற்றாலும் பாதிக்கபடுகிறார்கள். ஆரம்பக் கட்டத்தில் இந்த அறிகுறிகள் பொதுவாக மிதமான நிலையில் தொடங்கி, மற்றும் படிப்படியாக மோசமடையும். சிலர் அறிகுறிகள் எதுவுமில்லாமல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலருக்கு நுரையீரல் தொற்று நோய் அல்லது நுரையீரல் அழற்சி (நிமோனியா) வரலாம்.

 

3. How does COVID-19 spread?

3. COVID-19 எவ்வாறு பரவுகிறது?

People can catch COVID-19 from others who have the virus. The virus spreads via respiratory droplets (sharing saliva, utensils, being in close contact or through direct contact with droplets on surfaces and materials).

கொரோனாவைரஸ் உள்ளவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவலாம். இந்த வைரஸ் சுவாச துளிகள் வழியாக பரவுகிறது. அதாவது,  உமிழ்நீர்/எச்சில் பாத்திரங்கள் பகிர்வதின் மூலம், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம், அல்லது அவர்கள் தொட்ட இடங்கள் மற்றும் பொருட்களில் நீர்த்துளிகளுடன் நேரடி தொடர்பு மூலம்)

 

4. What is the test for COVID-19 like?

4. COVID-19 க்கான பரிசோதனை எப்படிப்பட்டது?

It is a swab test inserted in your nostril or at the back of your throat. It will last about 10 seconds. There might be a slight discomfort, however it is not significantly painful.

ஒரு பஞ்சு ஸ்வாப் உங்களுடைய மூக்கினுள் நுழைக்கப்படும். இது ஏறக்குறைய 10 வினாடிகளுக்கு நீடிக்கும். இது சற்று விநோதமான உணர்வாக இருக்கும். ஆனால், இது வலிக்காது.

 

 

5. What happens if I am tested positive for COVID-19?

5. COVID-19 க்கு நான் நேர்மறையாக (positive) சோதிக்கப்பட்டால் என்ன ஆகும்?

Arrangements will be made for you to be warded or sent to a community isolation facility, to be placed under observation. You will be observed for deterioration. You might require X-Rays and blood tests as well. Repeated testing of your respiratory samples (via nose or throat) will be done on a regular basis, usually 24 hours apart. If you test negative twice consecutively, you can be discharged back to your home/dorm to continue 2 weeks of isolation at home.

நீங்கள் மருத்துவமனைக்கோ,  தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்கோ செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும். அங்கே உங்களது உடல்நலம் மோசமடைகிறதா என்பது கண்காணிக்கப்படும். 

இக்கட்டத்தில் உங்களுக்கு ‘எக்ஸ்ரே’ மற்றும் ரத்த பரிசோதனைகள் தேவைப்படலாம். உங்களுடைய சுவாசிக்கும் இயல்பு 24 மணிநேர இடைவேளியில் பல முறைகள் பரிசோதிக்கப்படும்.  

 

பரிசோதனை முடிவுகள் தொடர்ச்சியாக இரண்டு முறைகள் எதிர்மறையாக இருந்தால், நீங்கள் மீண்டும் உங்கள் வீடு / தங்குமிடத்திற்கு திரும்பலாம். தொடர்ந்து 2 வாரங்களுக்கு தங்கும் இடத்தில் தனிமைப்படுத்தப்படுவீர்கள்.

 

6. Will I die from COVID-19?

6. COVID-19 இலிருந்து நான் இறந்துவிடுவேனா?

It is normal to worry about how COVID-19 might affect you or your loved ones. In 80% of cases, infections from COVID-19 are usually mild and do not even need any treatment. There is a chance of deterioration due to the virus, which happens more commonly in the elderly population or in those with significant pre-existing medical conditions. Only 5% of patients will require ICU care including breathing support or medications to support their blood pressure.

COVID-19 உங்களை அல்லது உங்கள் அன்புக்குரியவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி கவலைப்படுவது இயல்பு. 80% கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களில் நோயாளிகளுக்கு மிதமான தொற்று பிரச்சினைகளே ஏற்படும். அந்த நிலையில், சிகிச்சை எதுவும் மேற்கொள்ளாமல் குணமடையவும் வாய்ப்புண்டு.

ஏற்கனவே உடற்குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த நோய் தொற்றும்போது, இவர்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்படலாம். வழக்கமாக முதியவர்களின் உடல்நிலையை அதிகம் தாக்கக்கூடியது கொரோனா கிருமித்தொற்று.

5% நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவின் பராமரிப்பு தேவைப்படும். இரத்த அழுத்தத்தை ஆதரிக்கும் மருந்துகளும் மூச்சு இயக்கத்திற்கான ஆதரவும் இந்த சிகிச்சை முறையில் கிடைக்கும்.

 

7. Is there a treatment for COVID-19?

7. COVID-19 க்கு ஏதேனும் சிகிச்சை உள்ளதா?

Most cases of COVID-19 infections do not require any treatment, and only require medications to alleviate symptoms. There is currently no established treatment for the 5% of patients with severe disease, however there are many clinical trials ongoing which have shown variable success. Even though there is no established treatment, if you do develop severe disease, you will still receive breathing support and will be given medications to support your blood pressure.

COVID-19 நோய்த்தொற்றுகளின் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளைப் போக்க மருந்துகள் மட்டுமே தேவைப்படுகின்றன.  நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட 5% நோயாளிகளுக்கு தற்போது உதவ அறிவியல் பூர்வமாக சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும் பல மருத்துவ பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன, அவை இதுவரை மாறுபட்ட முடிவுகளைக் கொண்டுள்ளன. 

 

நிச்சயம் பெற்ற சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், நீங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டால், சுவாச ஆதரவையும் ரத்த அழுத்தத்தை ஆதரிக்க மருந்துகளையும் பெறுவீர்கள்.

 

 

8. How much do I have to pay for my treatment?

8. எனது சிகிச்சைக்கு நான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?

As of Singapore Government’s announcement on 7 March 2020, if you are a Singapore Citizen, Singapore resident OR a long term pass holder, your hospital bill will be covered by the Government. This does not apply if you have left Singapore after 27 March 2020 and you are admitted as a suspected COVID-19 case within 14 days of returning.

மார்ச் 7ஆம் தேதி அன்று சிங்கப்பூர் அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, நீங்கள் சிங்கப்பூர் குடிமகன், சிங்கப்பூர் குடியிருப்பாளர் அல்லது நீண்டகால அட்டை வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் மருத்துவமனை கட்டணத்தை அரசாங்கம் பூர்த்தி செய்யும். ஆனால்,  இந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதிக்குப் பிறகு நீங்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேறி, திரும்பி வந்து 14 நாட்களுக்குள் நீங்கள் COVID-19 உள்ளவர் என சந்தேகத்திற்குரியவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் இந்த கட்டணச் சலுகை உங்களுக்குப் பொருந்தாது.

 

9. I am worried about missing so much work. Will my boss fire me?

9. வேலைக்கு செல்ல முடியாததை எண்ணி கவலைபடுகிறேன். என்னுடைய முதலாளி என்னை வேலையிலிருந்து நீக்கிவிடுவாரா?

Your employer is legally mandated to allow your quarantine/treatment. Your employer is also legally bound to continue to pay your salaries even if you are not allowed to leave your dormitory during this Circuit Breaker period. If your employer does not pay your salary within 7 days of the end of the salary period, he can be prosecuted by the Singapore Government.

தனிமைப்படுத்தபடுவதுக்கும் சிகிச்சை பெறுவதுக்கும் உங்கள் முதலாளி நிச்சயமாக அதை சட்டப்படி அனுமதிக்கவேண்டும். உங்கள் தங்குமிடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாவிட்டாலும் உங்கள் சம்பளத்தைத் தொடர்ந்து செலுத்துவதற்கு உங்கள் முதலாளி சட்டப்படி கட்டுப்பட்டிருக்கிறார். சம்பள காலம் முடிந்த 7 நாட்களுக்குள் உங்கள் முதலாளி உங்கள் சம்பளத்தைச் செலுத்தவில்லை என்றால், அவர் மீது சிங்கப்பூர் அரசு வழக்குத் தொடரலாம்.

 

10. I am scared and I want to go home.

10. நான் பயப்படுகிறேன், நான் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்.

It is natural to be scared and anxious during this period. For the safety of your family, it is imperative that you follow the instructions given to you by your doctors and the Government. The Singapore Government has made arrangements for you so that we can safely treat you, if you test positive for COVID-19, while protecting others. Singapore has good hospitals and treatment here and will endeavour to give you the best medical care possible.

இந்தக் காலகட்டத்தில் பயப்படுவதும் கவலைப்படுவதும் இயல்பு. உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக, உங்கள் மருத்துவர்கள் மற்றும் அரசாங்க விதிமுறைகளைப் பின்பற்றவது அவசியம்.

 

உங்களுக்கு COVID-19 தொற்று ஏற்பட்டால், பாதுகாப்பாக உங்களுக்கு சிகிச்சையளித்து மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க சிங்கப்பூர் அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சிறப்பான சுகாதார பராமரிப்பை வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் முனையும்.

 

11. How can I make sure I do not get infected with COVID-19?

11. COVID-19 நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதை  நான் எவ்வாறு உறுதிப்படுத்துவது?

Fortunately, there are some preventive measures you can take to minimise the risk of infection. They are:

1. Thoroughly washing your hands with soap and water for at least 20 seconds.

2. Avoid touching eyes, nose and mouth.

3. Covering your mouth and nose with your elbow or tissue when you cough or sneeze.

4. Maintaining at least 1 metre distance between yourself and anyone else.

5. Staying indoors if you feel unwell and keep isolated from others. If you develop fever, cough or breathlessness, please seek medical attention early.

கிருமித்தொற்றின் அபாயத்தைக் குறைக்க நீங்கள் எடுக்கக்கூடிய சில தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன.

 

அவை:

1. குறைந்தது 20 விநாடிகளுக்கு சவுக்காரம் மற்றும் தண்ணீரில் கைகளை நன்கு கழுவுங்கள்.

 

2. கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

 

  1. இருமல் அல்லது தும்முல் வரும்போது உங்கள் முழங்கை அல்லது திசுவால் உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடுவது நல்லது. 

  2. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் குறைந்தது 1 மீட்டர் தூர இடைவெளியைக் கடைபிடித்தல்.

  3. Staying indoors if you feel unwell and keep isolated from others.

 

உங்களது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உங்களைத் தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருங்கள்..உங்களுக்கு காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், தயவுசெய்து விரைவாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

bottom of page